Testimony

Miracle Working God !

My name is PREM KUMAR. I live in Madhuranthagam, Chennai. I was very upset as my salary was not paid by the office, crossing 10 days from the beginning of the month. As I could not satisfy the needs of my family, I contacted Kirubai TV for prayers. After praying, I went to the bank in faith and found that my salary was credited in my bank account. Thank God for the miracle on time.

அற்புதம் செய்யும் தெய்வம் !

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!! என்னுடைய பெயர் பிரேம் குமார். சென்னையில் உள்ள மதுராந்தகம் பகுதியில் வசித்து வருகிறேன். மாதம் தொடங்கி 10 நாள்கள் ஆகியும் என்னுடைய சம்பள பணத்தை அலுவலகம் வழங்காததினால் அதிக கலக்கதிற்குள்ளானேன். என்னுடைய தேவைகள் என்னை நெருக்கினபடியினால் நான் கிருபை டிவி யை ஜெபத்திற்காக தொடர்பு கொண்டேன். ஜெபித்த பின்பு விசுவாசத்துடன் நான் வங்கிக்கு சென்று பார்த்தேன். என்னுடைய வங்கி கணக்கில் இல் சம்பள பணம் வரவு செய்யப்பட்டிருந்தது. அற்புதத்தை செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

Blessed with Government Job !

Praise the Lord !!! My name is Muthu Lakshmi . I live in the Singapperumal kovil area, Chengelpet district. For many days I have been trying to get a good government job. I was disappointed that nothing turned out positive. So one day I contacted Kirubai TV for prayers that I should get a government job. Within 10 days of praying, the Lord helped me to get a good government job. Glory to God who did miracle in my life.

அரசு வேலை பாக்கியம்!

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!!  என்னுடைய பெயர் முத்து லெட்சுமி. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் வசித்து வருகிறேன்.அதிக நாட்களாய் நல்ல ஒரு அரசு பணியில் அமர வேண்டும் என்று பிராயசப்பட்டுக்கொண்டிருந்தேன். எதுவும் கைகூடி வரவில்லை என்ற ஏமாற்றம் தான் எனக்கு.அப்படி ஒரு நாள் கிருபை டிவி யை தொடர்பு கொண்டு நல்ல ஒரு அரசு வேலை கிடைப்பதற்கு ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டேன். ஜெபித்த 10 நாட்களிலேயே கர்த்தர் நல்ல ஒரு அரசு பணியில் அமர எனக்கு உதவி செய்தார். ஜெபத்தை கேட்டு அற்புதம் செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்..

Child Blessing !

Praise the Lord. My name is Sandhya. I live in Meenjur,Chennai. My son Naveen Raj got married an year ago. Since they were waiting for child blessing, I contacted KIRUBAI TV for prayers on 13.5.2020.The KIRUBAI TV Prayer Executives offered Prayer of Faith and told that God will surely makes us a testimony. Truly God heared our prayers and blessed my daughter in law. On 21.8.2020 the doctor has confirmed the pregnancy for my daughter in law Esther.Glory be to God who heared our Prayers and did miracle in our life.

குழந்தை பாக்கியம் !

கர்த்தருக்கு ஸ்தோத்திரம். என் பெயர் சந்தியா.சென்னையில் உள்ள மீஞ்சூர் பகுதியில் வசித்து வருகிறேன். என் மகன் நவீன் ராஜுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு முடிந்து விட்டது.13.5.2020 அன்று கிருபை டிவியை தொடர்பு கொண்டு குழந்தை பாக்கிய த்திற்காய் ஜெபிக்கும் படி கேட்டுக் கொண்டேன். கிருபை டிவி ஊழியரும் விசுவாசத்துடன் ஜெபித்து, தேவன் உங்களை சாட்சியாய் நிறுத்துவார் என்று கூறினார்கள். தேவன் ஜெபங்களை கேட்டு அற்புதம் செய்து, என் மருமகள் எஸ்தருக்கு கர்ப்பத்தின் கனியைக் கட்டளையிட்டார். 21.8.2020 அன்று மருத்துவர்களால் என் மருமகளின் கர்ப்பம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஜெபத்தை கேட்டு அற்புதம் செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். ஆமென்.

Healing God!

Praise the Lord. I’m N. Robert from Thiruverkadu Koladi, aged 60. On 9th January suddenly my hands and legs weren’t functioning due to high BP. I was immediately admitted to ICU for treatment. My family was perplexed, not knowing what to do. They contacted Kirubai TV and requested for prayers. God heard our fervent prayers and healed me. I got discharged from hospital on 2nd February. Glory be to God for granting me complete healing and thanks to the Kirubai Tv prayer warriors for the prayer support. Let God’s name be glorified.

குணப்படுத்தும் தெய்வம் !

நான் திருவேற்காடு கோலடியைச் சேர்ந்த என். ராபர்ட் வயது 60. ஜனவரி 9- ம் தேதி திடீரென உயர் இரத்த அழுத்தம் காரணமாக என் கைகளும் கால்களும் செயல்படவில்லை. உடனடியாக ஐசியூவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் என் குடும்பத்தினர் திகைத்தனர். அவர்கள் கிருபை டிவியை தொடர்பு கொண்டு பிரார்த்த வேண்டுகோள் விடுத்தனர். தேவன் எண்களின் உருக்கமான ஜெபங்களைக் கேட்டு என்னை குணமாக்கினார். நான் பிப்ரவரி 2 ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். எனக்கு பூரண சுகம் அளித்த தேவனுக்கு மகிமை உண்டாகட்டும். மற்றும் எங்களுக்காக ஜெபித்த கிருபை டிவி ஜெப வீரர்களுக்கு நன்றி. தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்.

Healed From Dengue!

Praise the Lord. I’m Blessy. We live in Nedungundram, Chennai.My brother Roshan(aged 10) was afflicted with Dengue fever.He was admitted in ICU in a very critical stage. With much agony and fear we contacted Kirubai TV for prayers. The Kirubai TV Prayer Executives offered the Prayer of Faith and told, “The God who healed me from Dengue when I was in my death bed and the God who enabled me to pray for your brother today will surely grant perfect healing to Roshan”. These words brought a new kind of encouragement and faith within me. We as a family prayed in one accord with faith.The Lord heard our prayers and granted perfect healing to my brother and brought him back to home with good health.Glory be to God who healed my brother.

டெங்கு காய்ச்சலில் இருந்து சுகம் !

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். என்னுடைய பெயர் பிளெஸ்ஸி. நாங்கள் குடும்பமாய் சென்னையில் உள்ள நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வருகிறோம். என்னுடைய சகோதரன் ரோஷன்(வயது 10) டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைமையில் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.அதிக கலக்கத்தோடு கிருபை டிவியை ஜெபத்துக்காக தொடர்பு கொண்டோம். கிருபை டிவி ஜெப ஊழியர்களும் விசுவாசத்துடன் அதிக பாரப்பட்டு எங்களுக்காக ஜெபித்து ,”டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடின என்னை சுகப்படுத்தி இன்று உங்கள் சகோதரனுக்காய் ஜெபிக்க செய்த என் தேவன் நிச்சயமாய் ரோஷனுக்கு பூரண சுகத்தை கொடுப்பார்” என்று சொன்னார்கள். அந்த வார்த்தைகள் ஒரு புது விதமான உற்சாகத்தையும் விசுவாசத்தையும் எனக்குள் கொண்டு வந்தது.குடும்பமாய் நாங்களும் விசுவாசத்தோடு கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணினோம்.கர்த்தர் எங்கள் ஜெபங்களை கேட்டு என் சகோதரனுக்கு பூரண சுகத்தை கொடுத்து சுகமாய் வீடு திரும்ப உதவி செய்தார். சுகத்தை கொடுத்த கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்.

Child Blessing!

Praise the Lord. I am Sandhiya from Arakkonam. I prayed for the child blessing for over 4 years. There were times when all my expectations turned into disappointments and I called Kirubai TV for constant prayers and support. The prayer executives prophesied that next year you will be holding a baby in hand. I came to the inauguration of Kirubai TV Arakkonam Office,  along with my husband and Brother Samson prayed for us with so much burden. And God spoke through Brother Samson and he prophesied that this year I will conceive and receive the blessing of Child. God did a miracle and I conceived by God’s grace. I’m 2 months pregnant now. All Glory to God.

குழந்தை பாக்கியம் !

கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம். என்னுடைய பெயர் சந்தியா. நான் அரக்கோணத்தில் வசிக்கிறேன். இந்த சாட்சியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் குழந்தை பாக்கியம் வேண்டி 4 வருடங்களாக பிராத்தனை செய்து வந்தேன். என்னுடைய எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றமாய் போன படியால், தொடர்ச்சியாய்  நான் கிருபை டிவியிடம் பிராத்தனை செய்து வந்தேன். கிருபை டிவி ஜெப ஊழியர்கள் எனக்காக ஜெபித்து, அடுத்த வருடம் இதே நேரம் உங்கள் கையில் குழந்தை இருக்கும் என்று சொன்னார்கள். கிருபை டிவி அரக்கோணம் அலுவலகத்தின் திறப்பு விழாவிற்கு  நானும் என் கணவரும் சென்று இருந்தோம். அங்கு சகோதரர் சாம்சன் ஊக்கமாய் ஜெபம் செய்தார். அப்பொழுது கர்த்தர் சகோதரர் சாம்சன் மூலமாய் பேசி, இந்த ஆண்டு உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றார். தேவன் அற்புதம் செய்தார். நான் அதே ஆண்டு நான் கர்ப்பம் தரித்தேன். நான் இப்போது இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளேன்.  தேவனுக்கு மகிமை!!!

Healed from Covid-19!

Praise the Lord. I am Sathish from Villupuram. I am working as a male staff in Government Hospital Villupuram. On 4th May, a lady was admitted for delivery and the baby was born via caesarean. Both the mother and the baby tested Covid-19 positive. So our hospital authorities told all the employees to take Covid-19 test. I was very much worried about the results, so I called Kirubai TV for prayers on May 5th with much faith in God. The prayer executives encouraged me to pray for Covid-19 patients and said that God will definitely heal them. The next day the mother and baby were retested and found negative for Covid-19. All hospital staff are informed to join duty as usual. All Glory to God!!

கோவிட் - 19ல் இருந்து சுகம் !

கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம். என்னுடைய  பெயர் சதிஷ். நான் விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். மே மாதம் 4ஆம் தேதி ஒரு பெண் பிரசவத்திக்காக  அனுமதிக்கப்பட்டார். அவளுக்கு சீசரின் மூலம் குழந்தை பிறந்தது. இருவருக்கும் கோவிட்-19 இருப்பது உறுதி செய்யபட்டது. ஆகவே அனைத்து மருத்துவமனை  ஊழியர்களும் கோவிட்-19 பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். நான் பரிசோதனை முடிவுகள் குறித்து கலக்கமாய் இருந்த படியால்,  மே 5 ஆம் தேதி விசுவாசத்தோடு கிருபை டிவியை ஜெபத்திற்காக  அழைத்தேன். கோவிட்-19னால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக  ஜெபிக்கும்படி ஜெப ஊழியர்கள் என்னை ஊக்குவித்தனர். மற்றும் தேவன் பூர்ண சுகத்தை அளிப்பார் என்று விசுவாசமாகக் கூறினார். மறுநாள் தாயும், சேயும்  மறுபரிசோதித்த போது,  கோவிட்-19 நெகடிவ் என்று வந்தது. அனைத்து மருத்துவமனை  ஊழியர்களும்  எப்போதும் போல வேலைக்கு வரலாம் என்று தகவல் வந்தது. தேவனுக்கே மகிமை!!!

Healed From Skin Disease!

Praise the Lord, I’m Rachel. I live in Tirupur district. For the past two months, I have been ill with a sort of skin disease . My body was full of scars and wounds. Neither Doctors nor myself were able to diagnose the cause of this disease. There was no use in running behind doctors. There was no change in my body with any medication pills. It was very difficult for me as I was having high levels of irritation and pain . I had a lot of pains in my mind. I was depressed in mind. It was very difficult to do the day to day activities. I had great difficulty in changing my clothes and bathing. With much agony I contacted Kirubai TV for prayers on 09.05.2019. Kirubai TV prayer executives offered fervent prayers with much burden. What a miracle! The Lord changed my two-month agony within three days and healed all my wounds. My skin became completely new. I am healthier than before. Blessed be the Lord, who healed me from this skin disease completely . As long as I live, I shall be a living testimony unto the Lord. Amen!

தோல் வியாதிலிருந்து சுகம் !

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.என்னுடைய பெயர் ரேச்சல்.நான் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன்.கடந்த இரண்டு மாதங்களாய் ஒருவிதமான தோல் வியாதியினால் நான் அவதிப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன்.என்னுடைய மேனி முழுவதும் காயங்கள் நிறைந்த புண்களாய் இருந்தது. இது எதனால் வந்தது என்று எனக்கும் தெரியவில்லை என்னை பரிசோதித்த மருத்துவருக்கும் தெரியவில்லை. பல்வேறு மருத்துவரை தேடி நாடி ஓடியும் எந்த பலனும் இல்லை.எந்த மருந்து மாத்திரைக்கும் என் உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதிகமான எரிச்சல் தன்மையும் அரிப்பும் இருந்ததினால் நான் மிகவும் அவதிக்குள்ளானேன். அதிகமான மனஉளைச்சலுக்கும் உள்ளானேன். சராசரி வேலைகளை செய்வது கூட எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னுடைய உடைகளை மாற்றி கொள்வதிலும் குளிப்பதிலும் நான் அதிக சிரமத்தை அனுபவித்து வந்தேன். இதனிமித்தம் என் மனதில் ஏற்பட்ட காயங்கள் வலிகள் ஏராளமாய் இருந்தது. அதிக மன கலக்கத்தோடு நான் கிருபை டிவியை 09.05.2019 அன்று தொடர்பு கொண்டு எனக்காய் ஜெபிக்க சொல்லி கேட்டேன். கிருபை டிவியிலும் எனக்காக அதிக பாரப்பட்டு உருக்கத்தோடு ஜெபித்தார்கள். எவ்வளவு ஆச்சர்யம் என்னுடைய இரண்டு மாத வேதனையை மூன்றே நாளில் கர்த்தர் மாற்றி என் வாழ்வில் ஒரு பெரிய அற்புதத்தை செய்தார். என்னுடைய சருமம் முழுவதும் புதிதாய் மாறினது.முன்பு இருந்ததை விட ஆரோக்கியமாய் இருக்கின்றேன். மூன்றே நாளில் எல்லா விதமான காயங்கள் புண்கள் முழுவதும் சுகமடைந்து என் சருமம் ஆரோக்கியமாய் மாறி இருக்கின்றது. இந்த தோல் வியாதியில் இருந்து முழுவதுமாய் எனக்கு விடுதலை தந்து சுகமாய் வாழ்ந்திருக்க செய்த கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். நான் என் வாழ்நாள் உள்ளவரை கர்த்தருக்கு ஜீவனுள்ள சாட்சியாய் இருப்பேன். ஆமென்.

Miraculous Healing!

Praise the Lord.My name is Amutha Kamalesh Kumar.I live in Avadi,Chennai.My mother in law Mythili,was having a Tumour in stomach since 2 weeks.The doctor who examined her suspected it to be a cancer, took the samples and gave it for biopsy.As we were waiting for the test reports,I contacted KIRUBAI TV for prayers on 20/4/2019. With much faith,I prayed in union with KIRUBAI TV Prayer Warriors.My hope was not disappointed.God did a big miracle.A surprise awaited in the report which we were waiting for.We prayed to the Lord that the Tumour should not be a Cancerous .But the Lord enabled us to get the report that my mother in law has no Tumour at all.Thanks and Glory to the Lord who did exceeding abundantly above all that we have asked or imagined.

அதிசயமான சுகம் !

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.என்னுடைய பெயர் அமுதா கமலேஷ் குமார். சென்னையிலுள்ள ஆவடியில் வசித்து வருகிறோம். என்னுடைய மாமியார் பெயர் மைதிலி. அவர்களுக்கு இரண்டு வாரமாய் வயிற்று பகுதியில் கட்டி இருந்தது. அதை பரிசோதித்த மருத்துவர்கள் கேன்சர் கட்டியாய் இருக்க கூடுமோ என்று எண்ணி என் மாமியாரிடம் பயாப்ஸி டெஸ்ட் எடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். `நாங்களும் டெஸ்ட் எடுத்து வந்து ரிபோர்ட் வாங்குவதற்கு சில நாட்களுக்கு முன் 20.4.2019 அன்று கிருபை டிவியை தொடர்பு கொண்டு என் மாமியாரின் டெஸ்ட் ரிபோர்ட்டில் கேன்சர் கட்டி இருக்க கூடாது என்று கிருபை டிவியின் ஜெப ஊழியருடன் சேர்ந்து ஜெபித்து கர்த்தரை அதிகமாய் விசுவாசத்தோம்.எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. கர்த்தர் எங்களுக்கு ஒரு பெரிய அற்புதத்தை செய்தார். நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த டெஸ்ட் ரிபோர்ட்டில் எங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. கேன்சர் கட்டியாய் இருக்க கூடாது என்று தான் நாங்கள் ஜெபித்தோம். ஆனால் என் மாமியாருக்கு வயிற்று பகுதியில் கட்டியே இல்லை என்று ரிபோர்ட் வர கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார். நாங்கள் வேண்டி கொண்டதற்கும் நினைத்ததற்கும் அதிகமாய் கிரியை செய்த எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள். ஆமென்.

Wonder Working God !

Praise the Lord !!! My name is Sumathi. I live in Maraimalai nagar, Chengelpet District. I have been working hard for many days to get a good job. I was tired of not having received anything. One such day, I contacted Kirubai TV for prayers. God did a miracle for me. He granted me a good job the very next day itself. Today I’ve been informed that I made as a permanent employee in my company . Glory be to God who did miracle in my life.

அதிசயங்களை செய்யும் தேவன் !

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!! என்னுடைய பெயர் சுமதி. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் வசித்து வருகிறேன். நல்ல ஒரு வேலைக்காக அதிக நாட்களாய் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தேன். எதுவும் வாய்க்காத நிலைமையில் சோர்வுற்று இருந்தேன். அப்படி ஒரு நாள் கிருபை டிவி யை நான் ஜெபத்திற்காக தொடர்பு கொண்டேன். தேவன் எனக்கு அற்புதம் செய்தார். நான் ஜெபித்த மறுநாளே நல்ல ஒரு வேலையை எனக்குக் கட்டளையிட்டார். என் அலுவலகத்தில் என்னை நிரந்தர ஊழியராக மாற்றுவதாய் இன்று அறிவித்தார்கள். எனக்கு அற்புதம் செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்..

Blessed with Normal Delivery!

Praise the Lord. I’m Jeeva from Vandalur, Chengalpet District. When I was carrying my second baby, during my delivery time there were complications. The doctors said that the umbilical cord is around the baby’s neck and there is no chance for normal delivery. I prayed with faith and also contacted Kirubai TV for prayers. God heard our prayers and I am blessed with a baby girl – Vaishnavi, through normal delivery on 2nd April 2017. All Praise and Glory be to God.

சுக பிரசவ ஆசீர்வாதம்!

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!! என்னுடைய பெயர் சுமதி. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் வசித்து வருகிறேன். நல்ல ஒரு வேலைக்காக அதிக நாட்களாய் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தேன். எதுவும் வாய்க்காத நிலைமையில் சோர்வுற்று இருந்தேன். அப்படி ஒரு நாள் கிருபை டிவி யை நான் ஜெபத்திற்காக தொடர்பு கொண்டேன். தேவன் எனக்கு அற்புதம் செய்தார். நான் ஜெபித்த மறுநாளே நல்ல ஒரு வேலையை எனக்குக் கட்டளையிட்டார். என் அலுவலகத்தில் என்னை நிரந்தர ஊழியராக மாற்றுவதாய் இன்று அறிவித்தார்கள். எனக்கு அற்புதம் செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்..

HEALED FROM DENGUE!

Praise the Lord. I’m Sumathi from Chengalpet. My friend Manjula’s son was suffering from Dengue. As he was in a critical condition, the doctor advised us to take him to a big private hospital in Chennai. I contacted Kirubai TV for prayers and believed that God will do a miracle for my friend. God heard our prayers and healed my friend’s son from Dengue. The boy is discharged and is healthy now. All Glory to God.

டெங்கு காய்ச்சலில் இருந்து சுகம்!

கர்த்தருடைய   பரிசுத்த   நாமத்துக்கு   ஸ்தோத்திரம். நான் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி. எனது தோழி மஞ்சுளாவின் மகன் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தான். அவன்  மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், அவனை சென்னையில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர் அறிவுறுத்தினார். என் தோழிக்கு தேவன் அற்புதம் செய்வார் என்று விசுவாசித்து, கிருபை டிவி-ஐ ஜெபத்திற்காக தொடர்பு கொண்டேன். தேவன்  எங்கள் ஜெபத்தை கேட்டு, எனது தோழியின் மகனை டெங்குவிலிருந்து குணப்படுத்தினார். சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இப்போது நலமாக இருக்கிறான். தேவனுக்கே மகிமை !

MIRACULOUS COLLEGE ADMISSION!

Praise the Lord. I’m Manju from Maraimalai Nagar, Chengalpet District. After my high school, I decided to do a B.A History course in Rajeshwari College. But I did not get admission there as my cutoff was low. I was very much worried as I could neither afford nor desire a college that has a high fee structure. I was depressed about my future and didn’t know what to do. I contacted Kirubai TV and they prayed for me. I prayed that God should direct my steps and guide me to take the right path regarding my higher studies. God heard my prayers and I got admission for B.Com CA in Arthur College with less fees beyond what I had expected. Glory be to God who is able to do exceedingly abundantly above all that we ask or think. 

அதிசயமான கல்லூரி சேர்க்கை!

கர்த்தருடைய   பரிசுத்த   நாமத்துக்கு   ஸ்தோத்திரம். என்னுடைய பெயர்   மஞ்சு.  நான் செங்கல்பட்டு  மாவட்டத்தில் உள்ள  மறைமலை நகரில்  வசித்து  வருகிறேன். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  ராஜேஸ்வரி  கல்லூரியில்  B.A  வரலாற்றுப் படிப்பை  மேற்கொள்ள  முடிவு  செய்தேன்.  ஆனால்  எனது  கட்ஆஃப் குறைவாக  இருந்ததால், எனக்கு  அங்கு  சேர்க்கை  கிடைக்கவில்லை. வேறு கல்லூரியில் அதிகக் கட்டணம் செலுத்தி படிக்கும் அளவிற்கு வசதியோ, விரும்பமோ இல்லை. என்ன செய்வது  என்று  தெரியாமல் எதிர்காலத்தைப் பற்றி குழப்பதிலும் மன அழுத்தத்திலும் இருத்தேன். அப்பொழுது கிருபை டிவியை ஜெபத்திற்காக தொடர்பு  கொண்டேன். தேவன் என் பாதைகளை வழிநடத்தி,  மேற்படிப்பிற்கு  சரியான வழியைக்  காட்ட வேண்டும் என்று ஜெபித்தேன். தேவன் அற்புதம் செய்தார்.  இப்போழுது  ஆர்துர்  கல்லூரியில்  பி.காம் சி.ஏ.க்கு  நான்  எதிர்பார்த்ததை  விட  குறைவான  கல்வி கட்டணத்தில் அனுமதி கிடைக்க  கர்த்தர் உதவி செய்தார். நான் வேண்டிகொண்டதற்கும் நினைத்ததற்கும்  அதிகமாய்   கிரியை செய்த   தேவனுக்கு  கோடான  கோடி ஸ்தோத்திரங்கள்…

FINANCIAL BLESSINGS!

Praise the Lord! My name is Rani and I’m from Guduvanchery, Chengalpet District. I was deeply saddened as I did not receive the money for which I’ve been waiting a very long time to fulfil my needs. I was in a great depression, so I contacted Kirubai TV and they prayed for me. God did a big miracle in my life. After two days I got my money back. All Glory to God for he has answered my prayers.

பொருளாதார ஆசிர்வாதம்!

கர்த்தருடைய   பரிசுத்த   நாமத்துக்கு   ஸ்தோத்திரம்! என் பெயர் ராணி, நான் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவள். என் தேவைகளை நிறைவேற்ற நீண்ட நாட்களாக காத்திருந்த பணம் கிடைக்காததால், ஆழ்ந்த மனவேதனையில்  இருந்தேன். நான் மிகவும் மன உளைச்சலில் இருந்ததால்,  கிருபை   டிவியை தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்காக பிராத்தனை செய்தனர். தேவன் என் வாழ்க்கையில் ஒரு பெரிய அதிசயத்தை செய்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு என் பணம் திரும்பக் கிடைத்தது. என் பிராத்தனைக்கு பதில் அளித்த  தேவனுக்கு எல்லா மகிமையும் உண்டாகட்டும்.

HEALED FROM SICKNESS!

Praise the Lord. My name is Nancy and I am residing in Guduvanchery, Chengalpet District. My husband Reuben has not been feeling well for the past week. Due to his sickness he didn’t go to the office for one week. I contacted Kirubai TV for prayer and they prayed for my husband. God did a miracle and enabled my husband to go to the office the very next day. All Glory be to God.

நோயில் இருந்து சுகம் !

கர்த்தருடைய   பரிசுத்த   நாமத்துக்கு   ஸ்தோத்திரம். என்னுடைய பெயர்   நான்சி. நான்  செங்கல்பட்டு  மாவட்டத்தில்  உள்ள  கூடுவாஞ்சேரியில் வசித்து  வருகிறேன். எனது கணவர் ரூபன்னுக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாததால்  மிகவும் அவதிபடுகிறார். அதனால் ஒரு வாரமாக அலுவலகத்திற்கு செல்லவில்லை. அப்பொழுது கிருபை டிவியை தொடர்பு  கொண்டு ஜெபம் செய்தேன். தேவன் அற்புதம் செய்தார். மறுநாளே என் கணவர் அலுவலகம் செல்வதற்கு ஏற்ற பூர்ண சுகத்தை கொடுத்தார். தேவனுக்கு  கோடான  கோடி ஸ்தோத்திரங்கள்.

PRAYER ANSWERING GOD!

Praise the Lord! My name is Janaki. I am living in Mambakkam, Chennai. Without the support of my husband, I am raising two children and my monthly salary is INR 6000. Suddenly our house owner asked us to vacate the house. I was searching for a good house but all went in vain. All house rents were high and the minimum advance amount was INR 10000. Since my monthly salary was just 6000, I didn’t know what to do. I approached Kirubai TV for prayers. I told them about my miserable situation and the prayer warriors offered prayers with great compassion. God heard our prayers and did a miracle. He enabled us to shift to a new house the very next day afternoon by 3 pm. We got a good comfortable house for a lesser rent than the current house. All Glory to God.

ஜெபத்திற்கு பதில் அளிக்கும் தேவன்!

கர்த்தருடைய   பரிசுத்த   நாமத்துக்கு   ஸ்தோத்திரம். என் பெயர் ஜானகி. நான் சென்னை மாம்பாக்கத்தில் வசிக்கிறேன். என் கணவரின் ஆதரவின்றி, நான் இரண்டு குழந்தைகளை வளர்த்து வருகிறேன். எனது மாத சம்பளம் 6000 ரூபாய். திடீரென்று எங்கள் வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யும்படி கூறினார். நான் ஒரு நல்ல வீட்டைத் தேடிக்கொண்டிருந்தேன், ஆனால் அனைத்தும் வீணாகிவிட்டன. அனைத்து வீட்டு வாடகையும் அதிகமாக இருந்தது. மற்றும் குறைந்தபட்ச முன் பண தொகையே பத்தாயிரமாக  இருந்தது. எனது மாதச் சம்பளம் வெறும்  ஆறாயிரம்   என்பதால், என்ன செய்வது என்று தெரியவில்லை. ஜெபத்திற்காக கிருபை டிவி-ஐ தொடர்பு கொண்டேன் எனது அவல நிலையைப் பற்றி அவர்களிடம் கூறினேன். ஜெப வீரர்கள் மிகுந்த இரக்கத்துடன் பிரார்த்தனை செய்தனர். தேவன் எங்கள் ஜெபங்களை கேட்டு அற்புதம் செய்தார். அடுத்த நாள் மதியம் 3 மணிக்குள் புதிய வீட்டிற்கு மாற உதவி செய்தார். இப்போதுள்ள வீட்டை விட குறைவான வாடகையில் நல்ல வசதியான வீடு கிடைத்திருக்கிறது. தேவனுக்கே மகிமை.

HEALED FROM BREATHING PROBLEMS!

Praise the Lord. I’m Elizabeth from Padappai. My sister Karthika was blessed with a baby girl. Since the baby had difficulty in breathing, the doctors advised us to shift the baby to another hospital for necessary treatment.  My sister was in great despair because the child was separately admitted to a different hospital. We contacted Kirubai TV for prayers. We desired that no treatment should be done to the new born baby and the baby should be healed without any medications. God heard our prayers and healed the baby. Both mother and baby got discharged and are healthy now. All Glory to God. 

சுவாசப் பிரச்சனைகளில் இருந்து சுகம்!

கர்த்தருடைய   பரிசுத்த   நாமத்துக்கு   ஸ்தோத்திரம்.  என்னுடைய பெயர் எலிசபெத், படப்பை பகுதியில்  வசித்து  வருகிறேன்.  என்னுடைய  சகோதரி கார்த்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால், தேவையான சிகிச்சைக்காக குழந்தையை வேறு மருத்துவமனைக்கு மாற்ற டாக்டர்கள் அறிவுறுத்தினர். குழந்தையை மட்டும் தனியாக வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் எனது சகோதரி மிகுந்த  கலக்கத்தில் இருந்தால். நாங்கள் ஜெபத்திற்காக கிருபை டிவியை தொடர்பு  கொண்டோம். பிறந்த குழந்தைக்கு எந்த வித  சிகிச்சையோ, மருத்துவமோ இல்லாமல் குணப்பட வேண்டும் என விரும்பினோம். தேவன்   எங்களுடைய  ஜெபத்தைக்  கேட்டு அற்புதம் செய்தார். குழந்தைக்கு பூர்ண சுகத்தை கொடுத்தார். தாயும் குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இப்போது நலமாக உள்ளனர். தேவனுக்கு  கோடான  கோடி ஸ்தோத்திரங்கள்.

BLESSED WITH NORMAL DELIVERY!

Praise the Lord! My name is Joshua from Vandalur, Chengalpet District. My wife Elizabeth is 10 months pregnant. She is full term and her due date has already passed, but still she didn’t have any symptoms of labour pain. The doctors told me that Cesarean must be done. So we approached Kirubai TV and they prayed for us with so much burden. God heard our prayers and blessed us with a baby girl on 26th December 2017 through normal delivery. All Praise and Glory be to God.

சுக பிரசவ ஆசீர்வாதம்!

கர்த்தருடைய   பரிசுத்த   நாமத்துக்கு   ஸ்தோத்திரம். என் பெயர் ஜோஷ்வா. நான் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை சேர்ந்தவன். என் மனைவி எலிசபெத் 10 மாதங்கள் கடந்த நிறை மாத கர்ப்பிணி. அவளுடைய நிலுவைத் தேதி ஏற்கனவே கடந்துவிட்டது. ஆனால் இன்னும் அவளுக்கு பிரசவ வலிக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. சிசேரியன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். எனவே நாங்கள் கிருபை டிவியை அணுகினோம், அவர்கள் எங்களுக்காக மிகவும்  பாரத்தோடு பிரார்த்தனை செய்தனர். தேவன் எங்கள் ஜெபத்தை கேட்டு ஆசிர்வதித்தார்; 26 டிசம்பர் 2017 அன்று சுக பிரசவத்தின் மூலம் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தேவனுக்கே மகிமை.

BLESSED WITH DUAL PLACEMENTS!

Praise the Lord! I’m Kethsi from Erode. I have completed B.E ECE in an engineering college. While pursuing my final year, I attended many interviews. Final year is about to end and I haven’t got any placement in hand. As it was the last working day of my college, I was very much worried about my future and career. Then I contacted Kirubai TV, and they prayed for me. God answered my prayers and I got dual placement at VDOT and Jesus Calls. All Glory to God who blessed a girl like me who had no job, but now holds two job offers.

இரட்டை வேலை வாய்ப்பு ஆசீர்வாதம்!

கர்த்தருடைய   பரிசுத்த   நாமத்துக்கு   ஸ்தோத்திரம்! நான் ஈரோட்டைச் சேர்ந்த கெத்சி . பொறியியல் கல்லூரியில் B.E ECE முடித்துள்ளேன். இறுதியாண்டு படிக்கும் போது, பல நேர்காணல்களில் கலந்து கொண்டேன். இறுதியாண்டு முடியப் போகிறது, ஆனால் கையில் வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. என் கல்லூரியின் கடைசி வேலை நாள் என்பதால், எனது எதிர்காலம் மற்றும் வாழ்க்கை குறித்து நான் மிகவும் கவலைப்பட்டேன். பின்னர் நான் கிருபை  டிவியை தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்காக பிரார்த்தனை செய்தனர். தேவன் என் ஜெபத்திற்கு பதில் அளித்தார். எனக்கு VDOT மற்றும் இயேசு அழைக்கிறார் ஆகிய  வளாகத்தில் இரட்டை வேலை வாய்ப்பு கிடைத்தது. எந்த வேலையும் இல்லாத எனக்கு இப்போது இரண்டு வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாகட்டும்.

BLESSED WITH OWN BUSINESS!

Praise the Lord! I’m Usha from Chengalpet. It’s my long time desire to own a business. But I found difficulty in opening a shop as I couldn’t afford the resources. That time I attended the Kirubai TV ‘Sthriyae Women’s Fellowship’ that happens on every Wednesday and I prayed that God should open the way and break the hurdles that stop me from opening the shop. God heard my prayers and enabled me to open the shop next week itself. All Glory to God who blessed me with a shop.

சொந்த தொழில் ஆசீர்வாதம்!

கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு  ஸ்தோத்திரம். என்னுடைய பெயர் உஷா. செங்கல்பட்டு  மாவட்டத்தில்  வசித்து  வருகிறேன். சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால், அதற்கான  போதிய வசதி  மற்றும்  பொருளாதாரம் இல்லாததால், கடை திறப்பதில் நீண்ட நாள் தாமதம் ஏற்பட்டது. அந்த சமயம் புதன் கிழமை தோறும் நடக்கும் கிருபை டிவி ‘ஸ்த்ரியே ஜெப குழு’ கூட்டதித்தில் கலந்து கொண்டு, கடையை திறக்க விடாமல் தடுக்கும் தடைகளை தகர்த்தெறிய வேண்டும் என்று ஜெபித்தேன்.  தேவன் எங்கள் ஜெபத்தைக்  கேட்டு அற்புதம் செய்து, அடுத்த வாரமே கடையைத் திறக்க உதவினார். அற்புதம் செய்து எனது கடையை ஆசீர்வதித்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்.

HEALED FROM KNEE PAIN!

Praise the Lord. My name is Manjula Gethsiyal. I live in Moolakadai, Chennai. I have been suffering from knee pain for a very long time. In due course, I got habituated to living with knee pain. While watching Kirubai TV programs, I realised that I don’t need to live with this pain anymore. I immediately contacted the 24 hour prayer support of Kirubai TV and asked to pray for my healing. God healed me and my knee pain left the very same day. Glory to God! Hallelujah!

முழங்கால் வலியில் இருந்து சுகம்!

கர்த்தருடைய  பரிசுத்த  நாமத்துக்கு  ஸ்தோத்திரம்.  என்னுடைய  பெயர் மஞ்சுளா கெத்சியால்.  நான் சென்னை மூலக்கடையில் வசித்து  வருகிறேன். நான் நீண்ட நாட்களாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறேன். காலப்போக்கில், முழங்கால் வலியுடன் வாழ்வது எனக்குப் பழக்கமாகி விட்டது. கிருபை டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, ​​இனி இந்த வலியோடு வாழத் தேவையில்லை என்பதை உணர்ந்தேன். நான் உடனடியாக கிருபை டிவியின் 24 மணிநேர ஜெப உதவியை தொடர்பு கொண்டு,  என் நீண்ட நாள் முழங்கால் வலி குணமடைய பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டேன்.  தேவன் என்னைக் குணப்படுத்தினார் மற்றும் அதே நாளில் என் முழங்கால் வலி நீங்கியது. தேவனுக்கு  கோடான  கோடி ஸ்தோத்திரங்கள். அல்லேலூயா!

HEALED FROM HAND PAIN!

Praise the Lord. I’m Daincle from Kolathur, Nagercoil. I was suffering from hand pain for a long time. Doctors checked and reported that my condition looked like palsy. I believed in God that he would heal me without any medical treatments. I contacted Kirubai TV for prayers and told them my health condition. With great compassion and comfort, prayer warriors offered prayers for me. God heard our prayers and healed me completely. Now I have no pain and I thank God for this miracle. 

கை வலியில் இருந்து சுகம்!

கர்த்தருடைய   பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம்.  என்னுடைய  பெயர்  டேன்கிள்.  நான் நாகர்கோவில் உள்ள கொளத்தூரில் வசித்து  வருகிறேன்.  நீண்ட நாட்களாக கை வலியால் அவதிப்பட்டு வந்தேன். டாக்டர்கள் பரிசோதித்து, எனது உடல்நிலை முடக்குவாதம் போல் இருப்பதாக தெரிவித்தனர். எந்த மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் தேவன் என்னைக் குணப்படுத்துவார் என்று  நம்பினேன். பிரார்த்தனைக்காக கிருபை டிவியைத் தொடர்பு கொண்டு என் உடல்நிலையைச் சொன்னேன். மிகுந்த மனதுருகத்துடனும், ஆறுதலுடனும் எனக்காக பிரார்த்தனை செய்தனர். தேவன் எங்கள் ஜெபங்களைக் கேட்டு என்னை முழுமையாக குணப்படுத்தினார். இப்போது எனக்கு எந்த வலியும் இல்லை,  அற்புதம் செய்த தேவனுக்கு  கோடான கோடி ஸ்தோத்திரங்கள்.

HEALED FROM EAR PAIN!

Praise the Lord. I’m Sandhiya from Arakkonam. My brother Amuthan was having severe ear pain. Inspite of all the medications taken, there was no cure. He suffered sleepless nights due to the immense pain. I called Kirubai TV for prayers and the prayer warriors offered immediate prayers. After being prayed to, God healed my brother on the same day. He slept well with no pain in ears. Glory to be God for this miracle.

 காது வலியில்  இருந்து சுகம்!

கர்த்தருடைய   பரிசுத்த   நாமத்துக்கு   ஸ்தோத்திரம்! நான் அரக்கோணத்தை  சேர்ந்த  சந்தியா. என் சகோதரன் அமுதனுக்கு மிகுந்த காது வலி இருந்தது. அனைத்து மருந்துகளையும் எடுத்துக்கொண்டாலும், குணப்படுத்த முடியவில்லை. மிகுந்த வலியால் பல இரவுகள் தூக்கமின்றி தவித்தார் .நான் கிருபை டிவியை பிரார்த்தனைக்கு அழைத்தேன், ஜெப  வீரர்கள் உடனடியாக பிரார்த்தனை செய்தனர்.ஜெபித்த பிறகு, அதே நாளில் தேவன்  என் சகோதரனைக் குணப்படுத்தினார்.காது வலியில்லாமல் நன்றாகத் தூங்கினார். அற்புதம் செய்த தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாகட்டும்.

DELIVERED FROM FEAR OF WITCHCRAFT!

Praise the Lord. I’m Gowri from Vellore. My sister Lavanya was suffering from bad dreams and the fear of witchcraft. I called Kirubai TV for prayers and requested to pray for my sister who is tormented by evil spirits daily. God heard our prayers and delivered my sister from all her fears. All things are possible for those who believe. Glory be to God for delivering and rescuing my sister.

 மாந்திரீக பயத்தில் இருந்து விடுதலை.!

கர்த்தருடைய   பரிசுத்த   நாமத்துக்கு   ஸ்தோத்திரம்! நான் வேலூரை சேர்ந்த கவுரி.என் சகோதரி லாவண்யா கெட்ட கனவுகளாலும், மாந்திரீக பயத்தாலும் அவதிப்பட்டு வந்தார். நான் ஜெபத்திற்காக கிருபை டிவியை அழைத்து பொல்லாத ஆவியினால் தினமும் வேதனை படும் என் சகோதரிக்காக ஜெபிக்கும் படி கேட்டேன். தேவன் எங்கள் ஜெபங்களை கேட்டு என் சகோதரியைய் எல்லா பயத்தில் இருந்தும் விடுவித்தார். விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். என் சகோதரியை விடுவித்து மீட்ட தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாகட்டும்